1. 25-ஆவது நிறுவனமாக ஐஆர்சிடிசியும்,
26-ஆவது நிறுவனமாக ஐஎஃப்ஆர்சியும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளன.
2. உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மார்ச்
3) குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-ஆவது கூட்டம் நடந்தது.
3. சர்வதேச திரையுலம், ரசிகர்களின் மிகுந்த
எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா
மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் ‘டால்பி‘ அரங்கில் இரவு விமர்சையாக நடைபெற்றது.
4. காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக்
கொண்டு பாலஸ்தீன் இயக்குநர்-இஸ்ரேல் பத்திரிகையாளர் இணைந்து தயாரித்த ‘நோ அதர் லேண்ட்‘
சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.