TNPSC தகவல் துளிகள் (05.03.2025)


 



 



1. உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான
ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.



 



2. சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல்
நீதிபதிகளாக இருந்த ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர்
ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா
தலைமையிலான கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.



 



3. உயர்நிதிமன்றத்தில் வழக்கமாக 2 ஆண்டு
காலத்துக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவோர், பின்னர் நிரந்தர நீதிபதியாக பதவி
உயர்வு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



4. திருவண்ணாமலை, ராஜபாளையம் மற்றும்
விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.



 



4. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும்
திட்ட செயலாக்க அமைச்சகத்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.



 



5. ஏரியா சபையைக் கட்டாயமாக தேசிய வாக்காளர்
தினமான ஜனவரி 25, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி, அண்ணா பிறந்த
தினமான செப்டம்பர்-15, சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10-ஆம் தேதி கூட்ட வேண்டும்.



 



6. இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி
ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர
மோமடியுடன் சந்தித்துப் பேசினர்.



 



7. குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில்
உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்துக்குள் சுமார்
3,000 ஏக்கர் பரப்பில் ‘வனதாரா‘ என்ற பெயரில் வனவிலங்குகள்-பறவைகள் பாதுகாப்பு, மீட்பு
மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.



 



8. அய்யா வைகுண்டர் 193-ஆவது அவதார தினத்தை
முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஊர்வலமாக புறப்பட்டுச்சென்றனர்.