TNPSC தகவல் துளிகள் (07.03.2025)


 

1. டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு
புகார் தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 

2. உள்ளூர் மக்களின் அன்றாட தேவைகளான
தடி மரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தமிழகத்தில்
100 மரகத பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) அமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

3. ‘வேலியன்ட்‘ என்னும் தலைப்பில் இசையமைப்பாளர்
இளையராஜா இயற்றியிருக்கும் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில்
உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதல் முறையாக மார்ச் 8-இல் அரங்கேற்றப்படவுள்ளது.

 

4. தமிழகத்தில் மக்காச்சோள விற்பனைக்காக
வசூலிக்கப்பட்டு வந்த ஒரு சதவீத சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.

 

5. கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர்
மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு
பார்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

6. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகர்வில்
இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

7. முன்பு 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்
நக்ஸல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தது. 
தற்போது அந்த எண்ணிக்கை 24-ஆகக் குறைந்துள்ளது.

 

8. இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட
‘டி.எம்.ஹெச்-11‘ என்ற கடுகை பரிசோதனை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்
செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அனுமதி அளித்தது.

 

9. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்ற
நீதிபதி ஐயமால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற
கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

 

10. வருமான வரித்துறை மேற்கொண்ட சிறப்பு
பிரசாரத்தின் மூலம், வெளி நாடுகளில் ரூ. 29,000 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதை
30,000-க்கும் அதிகமான வரி செலுத்துவோர் தாங்களாக முன்வந்து அறிவிப்பு செய்துள்ளனர்.

 

11. லக்னௌ, ஜெய்பூர், இந்தூர், போபால்,
சூரத், நாகபுரி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் பெண்கள் அதிகமாக வேலைகளைப் பெறும் முக்கிய
வேலைவாய்ப்பு மையங்களாக உருவெடுத்துள்ளன.