TNPSC தகவல் துளிகள் (08.03.2025)


 

1. சென்னை, பரங்கிமலை அதிகாரிகள் பயிற்சி
அகாதெமியில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில், ராணுவ அதிகாரிகளின்
கண்கவர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

2. டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை
கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.
2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

 

3. சாகித்திய அகாதெமியின் தலைவர் மாதவ்
கௌஷிக்.

 

4. ‘என்டே ஆண்கள்‘ என்ற நளினி ஜமீலாவின்
மலையாள மொரி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்‘ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த
ப.விமலாவின் படைப்பு சிறந்த தமிர் மொழிபெயர்ப்பு நூலாக தேர்வு செய்யப்பட்டது.

 

5. சுதா மூர்த்தியின் ‘டாலர் பாஹு‘ என்ற
ஹிந்தி நாவலின் சிந்தி மொழி படைப்பு (ஷோபா லால்சந்தானி), ‘யான‘ என்ற எஸ்.எல்.பைரப்பாவின்
கன்னட நாவலின் மலையாள மொரி பெயர்ப்பு (கே.வி. குமாரன்), உருது கவிதைத் தொகுப்பான ‘ஹசாரோன்
குவாஷிஷெய்ன் அய்சி‘ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி வொண்டர்ஃபுல் வேர்ல்ட்
ஆஃப் உருது கஸல்ஸ்‘ (அனிசுர் ரஹ்மான்), இந்திய நவீன கலைஞர் சையத் ஹைதர் ரஸாவின் வாழ்க்கை
வரலாற்றின் ஹிந்தி மொழிபெயர்ப்பு (மதன் சோனி), ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதையான ‘மதுஷாலா‘வின்
மணிப்பூரி மொழிபெயர்ப்பு (சோய் பம்சா இந்திரகுமார்), கனக் லால் பரவாவின் ‘காமரூபாவின்
ஆரம்பகால வரலாறு‘ என்ற அஸ்ஸாமிய மொழிபெயர்ப்பு (அஞ்சன் சர்மா), பீஷ்ம சஹானியின் ஹிந்தி
நாவலான ‘தமஸ்‘-இன் டோக்ரி மொழிபெயர்ப்பு (அர்ச்சனா சேகர்) ஆகியவை சாகித்திய அகாதெமி
பரிசுக்குத் தேர்வாகியுள்ளன.

 

6. தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி
ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர்
ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

7. இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும்
வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன
என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

 

8. கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில
பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

9. தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட்
மீண்டும் வெடித்துச் சிதறியது.

 







































10. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை
அடுத்த தக்கோலம் அருகே உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் ராஜாதித்ய சோழன்
பயிற்சி மையத்தில் சிஜஎஸ்எஃப் 56-ஆவது தொடக்க நாள் விழா நடைபெற்றது.