1. சர்வதேச மகளிர் தின விழாவில், 100
மகளிர் பயனாளிகளுக்கு இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ஆட்டோக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்
வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2. வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாகத்
தங்குவதற்கு தொடங்கிய காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை,
ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
3. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய
துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
4. சீனா, பாகிஸ்தான் இடையே பெரிய அளவில்
ரகசியக் கூட்டு இருக்கிறது, என்னைப் பொறுத்தவரை, இருமுனை அச்சுறுத்தல் என்பதே யதார்த்தம்
என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
5. தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை
மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார்
ரெட்டி உத்தரவிட்டார்.
6. தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை
அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் நீதிமன்ற
உத்தரவின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
7. ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில்
இன்னும் 10 மாதங்களுக்குள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்
மின் ஆங் லாயிங் தெரிவித்துள்ளார்.
8. பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த
சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர்
யசோதா சண்முகசுந்தரத்துக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருதை முதல்வர் ஸ்டாலின்
வழங்கினார்.
9. 2025-ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள்
முன்னேற்றத்துக்கான மாநில விருதை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த க.
சௌமியாவுக்கு முதல்வர் வழங்கினார்.
10. மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு
தின விருதுகளையும், பதக்கங்களையும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, காஞ்சிபுரம்
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு வழங்கினார்.
11. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்
ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன்
தெரிவித்தார்.
12. தில்லியில் சாகித்திய அகாதெமி சார்பில்
நடைபெற்ற 2024-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி பிரிவில் ‘திருநெல்வேலி
எழுச்சியும், வ.உ.சி.யும் 1908‘ எனும் நூலுக்காக பேராசிரியர் ஆ.இர. வேங்கடாசலபதிக்கு
சாகித்திய அகாதெமி விருதை அகாதெமியின் தலைவர் மாதவ் கௌஷிக் கௌரவித்தார்.